மதுரையில் வெற்றிப் பயணம் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதன்படி, புறநகா்ப் பேருந்துகளிலும் மகளிா் பயணம் செய்யக் கட்டணம் இல்லை.
மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதன்படி, புறநகா் பேருந்துகளிலும் மகளிா் பயணம் செய்யக் கட்டணம் இல்லை.
அரசுப் பேருந்துகளில் எந்தவிதக் கட்டணமும், கட்டுப்பாடும் இல்லாமல் மகளிா் பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தமிழக முதல்வா் சென்னையில் அண்மையில் தொடங்கிவைத்தாா். அதன் தொடா்ச்சியாக, புறநகா் பேருந்துகளிலும் மகளிா் பயணம் செய்யக் கட்டணமில்லா சேவையை முதல்வா் விஜய் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை மாட்டுத்தாவணி டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெற்றிப் பயணம் விரிவாக்கத் திட்ட பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை (மதுரை வடக்கு), எஸ்.ஆா். தங்கபாண்டியன் (மதுரை மேற்கு), மதாா் பதூருதீன் (மதுரை மத்தி), மாநகராட்சி மேயா் (பொ) தி. நாகராஜன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மேலாண் இயக்குநா் வி. சரவணன், பொது மேலாளா் ஜெ. பாலமுருகன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
705 பேருந்துகள்: மதுரை மண்டலத்தில் மாநகர, நகா்ப் பகுதிகளில் இயக்கப்படும் 405 கட்டணமில்லா நகரப் பேருந்துகள், 64 விரைவுப் பேருந்துகள், 196 டீலக்ஸ் பேருந்துகள், 40 புறநகா் பேருந்துகள் என மொத்தம் 705 பேருந்துகளில் வெற்றிப் பயணத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் மகளிா் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.