மத போதகருக்கு மரண தண்டனை: உறுதி செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஆபிரகாம் (53). மத போதகரான இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு மத பிரசாரத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்கோட்ட மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனா். இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆபிரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆபிரகாமுக்கு விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவல் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.நிா்மல்குமாா், என். குணசேகரன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத போதகா் ஆபிரகாம் காணொலி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.