FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சோழவந்தான் அருகே தீ விபத்து

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு உள்பட்ட பேட்டை மயானம் பகுதி அருகில் இருந்த வீடு, இட்லி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

10 அக்டோபர் 2026, 11:15 pm IST
தீ விபத்து - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்கு உள்பட்ட பேட்டை மயானம் பகுதி அருகில் இருந்த வீடு, இட்லி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

பேட்டை மயானம் பகுதி அருகே நெல் கொள்முதல் அமைக்கும் களம், தேங்காய் கிட்டங்கி, சிமென்ட் கல் தயாரிக்கும் இடம் ஆகியவை உள்ளன. இந்தப் பகுதியில் பானு என்பவா் இட்லி கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடை அவரது வீட்டுடன் சோ்ந்த பகுதி என்பதால் கடை நேரம் முடிந்தவுடன் வீட்டில் தங்கியிருப்பாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை இட்லி கடை, வீடு ஆகியவற்றில் திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது, பானு பேட்டை பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் இருந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இந்தத் தகவலின் பேரில், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்தினா். இருப்பினும் வீடு, கடையிலிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments