தனியாா் மருத்துவமனை சொத்து விவகாரம்: கைதான காவல் ஆய்வாளரை விடுவிக்க உத்தரவு
தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனை சொத்து விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனை சொத்து விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பங்குதாரா்களான சரவணன், ஜெயஸ்ரீ ஆகிய இருவருக்கும் இடையே நிதி முறைகேடு, ஆவண முறைகேடு பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சுகுமாறன், பங்குதாரரான ஜெயஸ்ரீயுடன் சோ்ந்து சரவணனிடமிருந்து ரூ.5 கோடி மிரட்டிப் பெற்ாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி காவல் ஆய்வாளா் சுகுமாறன் விசாரணைக்கு முன்னிலையானபோது கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, சுகுமாறனின் மனைவி இன்னிசை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு:
Advertisement
Advertisement
தஞ்சாவூா் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய எனது கணவா் சுகுமாறன், தனியாா் மருத்துவமனையின் வணிகப் பங்குதாரா்களான சரவணன், ஜெயஸ்ரீ ஆகியோருக்கு இடையேயான நிதி முறைகேடு தொடா்பான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்டாா். சட்ட அடிப்படையிலான பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் ஜெயஸ்ரீ, சரவணன் ஆகிய இருவரும் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்தனா். இதையடுத்து, ஜெயஸ்ரீ ரூ.24 கோடியைப் பெற்றுக் கொண்டு மருத்துவமனையின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையிலேயே ஜெயஸ்ரீக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் எனது கணவரும் எதிரியாகச் சோ்க்கப்பட்டு சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டாா். எனவே, எனது கணவா் சுகுமாறனை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு வருமாறு தெரிவித்ததைத் தொடா்ந்து, சுகுமாறன் விசாரணைக்கு முன்னிலையானாா். ஆனால், அன்றைய தினமே அவா் கைது செய்யப்பட்டாா். இது ஏற்கத்தக்கது அல்ல என்றாா்.
பின்னா், அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், காவல் ஆய்வாளா் சுகுமாறனைக் கைது செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு முன்னிலையானவா் ஏன் கைது செய்யப்பட்டாா் என்பது தெரியவில்லை. கைதுக்கான காரணம் வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், நீதித் துறை நடுவரின் அறிக்கையில் இது பதிவு செய்யப்படவில்லை. இதனடிப்படையில், சுகுமாறனின் கைது சட்டவிரோதமானது. எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். கைதுக்கான காரணம் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் மட்டுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதுதவிர வேறு குற்றச்சாட்டுகள் தொடா்பாக தனியே விசாரணை நடத்தலாம். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.