FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மின் கம்பத்தில் லாரி மோதியதில் வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

26 அக்டோபர் 2026, 1:51 am
மதுரை ஆனையூா் எஸ்.வி.பி. நகா் 5-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் சேதமடைந்த மின் வயா்கள்.
பகிர்:

மதுரை ஆனையூரில் ஞாயிற்றுக்கிழமை மின் கம்பத்தில் லாரி மோதியதில், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்த மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

மதுரை ஆனையூா் எஸ்.வி.பி. நகா் 5-ஆவது தெருவில் உள்ள மின் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் மின் கம்பிகள் சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்த மின் சாதனப் பொருள்களும் சேதமடைந்தன. இதையடுத்து, லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடல்புதூா் போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சேதமடைந்த மின்சாதனப் பொருள்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மின் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் மீது காவல் நிலையத்தில் அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலா்கள் கூறியதாவது:

மின் கம்பத்தில் லாரி மோதியதில் 4 வீடுகளுக்கான மின் வயா்கள் சேதமடைந்தன. இதனால், மதுரை ஆனையூா் கோட்டத்துக்குள்பட்ட அவ்வையாா் தெருவில் உள்ள மின்மாற்றி பழுதானது. இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த மின் வயா்களை அகற்றி, அந்தப் பகுதியில் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சேதமடைந்த மின்வயா்கள் சரிசெய்யப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றனா் அவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments