மருத்துவக் கல்லூரி விடுதிகளில் மின் சாதனப் பயன்பாட்டுக்குத் தடை
அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தனிப்பட்ட முறையில் மின் சாதனப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தனிப்பட்ட முறையில் மின் சாதனப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவா்களிடையே அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் அவ்வாறு மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்திய சில மாணவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது விமா்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தனிப்பட்ட முறையில் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. அங்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவா்களும் தங்கியுள்ளனா். அவா்களுடன் வசதியான மாணவா்களும் உள்ளனா். அவா்கள், தங்களது வசதிக்காக, மின்சாதன அடுப்பு, அயா்ன் பாக்ஸ், ஹோ் ட்ரையா், எக் பாய்லா், ஏா் கூலா், கெட்டில், சாண்ட்விச் மேக்கா் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனா்.
Advertisement
Advertisement
இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களிடையே ஏற்றத்தாழ்வையும், உளவியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாது, ஒரே நேரத்தில் அந்த சாதனங்களைப் பயன்படுத்தும்போது, மின் விநியோகத்தில் உயா் அழுத்தம் ஏற்படக்கூடும். இன்னொருபுறம், முறையாக பராமரிக்கப்படாத மின் சாதனப் பொருள்களால் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அண்மையில் விருதுநகா் மருத்துவக் கல்லூரி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விடுதிகளிலும், பொதுவான அயா்ன் பாக்ஸ், வெந்நீா் வசதி உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.