FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரையில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

மதுரையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

29 அக்டோபர் 2026, 2:52 am
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த மாநில இணை இயக்குநா் வை. குமாா். உடன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

மதுரை, அழகா்கோவில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை மாநில இணை இயக்குநா் வை. குமாா் தொடங்கி வைத்தாா். 24 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 1,600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் இந்த மாணவா்களுடன் வந்த ஆசிரியா்கள், பெற்றோா்கள் என மொத்தம் சுமாா் 3,400 போ் பங்கேற்றனா். மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

இதேபோல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் மதுரை சா்வேயா் குடியிருப்பில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றன. இதில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 1,540 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இரு இடங்களிலும் போட்டிகளை நடத்துவதற்காக மேல்நிலை, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், உடல் கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். முன்னதாக, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் வரவேற்றாா். மாவட்ட உதவித் திட்ட அலுவலா் மா. மாரி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments