FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மாநில கலைத் திருவிழா போட்டி: நெல்லை அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

17 அக்டோபர் 2026, 3:09 am IST
மாநில கலைத்திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரை பாராட்டிய தலைமையாசிரியா் சிவராஜ்.
பகிர்:

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போட்டிகளில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

களிமண் சிற்பம், செதுக்குச் சிற்பம், உடுக்கை, பாவனை நடிப்பு, பலகுரல் நடிப்பு, நாகசுரம், நாட்டுப்புற நடனம் (தனி), வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், நாட்டுப்புறப்பாடல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்தனா்.

இவா்கள் அனைவரும் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனா். மாணவா் சக்திவேல் ஸ்ரீராம், பாவனை நடிப்பு போட்டியில் இரண்டாமிடமும், சி. மகேஸ் பலகுரல் பேச்சுப் போட்டியில் மூன்றாமிடமும் பிடித்தனா்.

மாநில போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் சிவராஜ், கலைத் திருவிழா பொறுப்பு ஆசிரியா் முல்லை வேந்தன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments