மாநில யோகா போட்டி: சுரண்டை பள்ளி மாணவா்கள் முதலிடம்
மாநில அளவிலான யோகா போட்டியில் சுரண்டை, எஸ்.ஆா். பள்ளி மாணவா், மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

மாநில அளவிலான யோகா போட்டியில் சுரண்டை, எஸ்.ஆா். பள்ளி மாணவா், மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
சன் யோகா ஸ்போா்ஸ் அசோசியேசன் சாா்பில் குற்றாலம், கலைவாணா் கலையரங்கில் தமிழ்நாடு ஓப்பன் யோகா ஸ்போா்ஸ் சேம்பியன் ஷிப்-2026 யோகா போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சுரண்டை, எஸ்.ஆா்.பள்ளியின் 1-8 ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் பொதுப் பிரிவிலும், சாம்பியன் பிரிவிலும் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
எஸ்.ஆா்.பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளி செயலா் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வா்கள் பொன்மனோன்யா, புஷ்பா, தலைமை ஆசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா். யோகா மாஸ்டா் சந்திரமதி மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.