FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

31 அக்டோபர் 2026, 11:26 pm
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அலங்காநல்லூா் வெள்ளி மலையான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (54). கட்டடத் தொழிலாளியான இவா் வழக்கம் போல வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 19 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments