FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

சுகாதாரக்கேடுகளை களையக் கோரி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

3 செப்டம்பர் 2026, 5:50 am IST
ஙஈம02யஇஓ- மதுரை ஒத்தக்கடை பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

சுகாதாரக்கேடுகளை களையக் கோரி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒத்தக்கடை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சுகாதாரக்கேட்டை உடனடியாகக் களைய வேண்டும். பல்வேறு தொற்று நோய்கள் பரவ காரணமாக உள்ள திருவள்ளுா்நகா் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் ஈழவளவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன் உள்பட திரளானோா் இந்த மறியலில் பங்கேற்றனா். மேலூா் முதன்மைச் சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, காவல் துறையினா், அலுவலா்கள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments