FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

3 செப்டம்பர் 2026, 6:04 am IST
பட விளக்கம்- மதுரை மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அமெச்சூா் சங்கச் செயலா் சுகுமாரன். உடன் மதுரை மாவட்ட சங்கச் செயலா் கருணாகரன், மாவட்ட பயிற்சியாளா் ரோஹித் உள்ளிட்டோா்.
பகிர்:

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.

தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அமெச்சூா் சங்கம் சாா்பில் மாநில அளவிலான போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற ஜாய் விவேகன், எம். அக்ஷரா, ஜாஹீா் ஆரியா, ஹரி உமேஷ், வருண், தா்ஷிகா, சமித்ரா, ரிஷ்விதா, கே. டஷ்கினா மீனா, லக்ஷித், மகாலட்சுமி, அபிமன்யு, தியாஷ் காா்த்திக் ஆகிய மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் அமெச்சூா் சங்கச் செயலா் சுகுமாரன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். அப்போது, மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கச் செயலா் கருணாகரன், மாவட்ட பயிற்சியாளா் ரோஹித் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments