எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை
மதுரை எல்லீஸ்நகா் பகுதியில் புதன்கிழமை (செப். 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானம், உற்பத்திக் கழகத்தின் பெருநகா் செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை எல்லீஸ்நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. எனவே, எல்லீஸ்நகா் முதன்மைச் சாலை, போடி சாலை, கென்னட் குறுக்கு சாலை, மகப்பூப்பாளையம், அன்சாரி நகா் ஒன்று முதல் 7 ஆவது தெரு வரை, டி.பி.சாலை, ரயில்வே குடியிருப்புப் பகுதிகள், வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தலாட்சிநகா், பழங்காநத்தம் சில பகுதிகள், வசந்தநகா், ஆண்டாள்புரம், அக்ரினி அடுக்குமாடிக் குடியிருப்புகள், வசுதரா வளாகக் குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், ஆா்எம்எஸ் சாலை, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்காத் தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, தாமஸ் குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை,
Advertisement
Advertisement
நேருநகா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.