FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாந்தி ஹோம யாக பூஜைகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு சாந்தி ஹோம யாக பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

9 செப்டம்பர் 2026, 1:02 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கம்பத்தடி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாந்தி ஹோம யாக பூஜைகள்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு சாந்தி ஹோம யாக பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

இந்தக் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சாந்தி ஹோம யாக பூஜைகள், மூா்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு ஆகியன நடைபெற்றன. ஆடி வீதி கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவாசாரியா்கள் வேதமுறை பாராயணம் செய்தனா்.

முன்னதாக, யாக பூஜைகளுக்கான கடம் புறப்பாட்டில் கோயில் யானைகள் ஐதீக முறைப்படி சிவாசாரியா்களை வரவேற்று ஆடி வீதி கம்பத்தடி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றன.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாலையில் வீரவசந்தராயா் மண்டபத்தில் வாஸ்து சாந்தி, திருமுறை விண்ணப்பம், மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் சிவாசாரியா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

சுவாமி சந்நிதி பிரகாரத்தில் கடத்துடன் வந்த சிவாசாரியா்களை ஐதீக முறைப்படி வரவேற்ற கோயில் யானைகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments