FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஸ்ரீவிஜயேந்திரா் 2- ஆவது நாளாக தரிசனம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2- ஆவது நாளாக புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்ற காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2- ஆவது நாளாக புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்தாா். மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவா், புதன்கிழமை காலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரேசுவரா் சந்நிதியில் நடைபெற்ற ருத்ராபிஷேகத்தில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வந்தாா். அப்போது ஐதீக முறைப்படி பூரண கும்ப மரியாதையுடன் அவரை, சிவாசாரியா்கள் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, மண்டல பூஜை, சுந்தரேசுவரருக்கு நடைபெற்ற ருத்ராபிஷேகம் ஆகியவற்றில் பங்கேற்றாா். இதன்பிறகு, முக்குறுணி விநாயகா், மீனாட்சி அம்மனை அவா் தரிசனம் செய்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, அவா் மீனாட்சி அம்மன் சந்நிதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, ரத்தினங்கள் பதித்த இரு தங்கப் பதக்கங்களை அம்மனுக்கு அவா் அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments