FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்வு: ராமநாதபுரத்தில் 14,536 பேர் எழுதினர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை 47 தேர்வு மையங்களில் 14,536 மாணவ, மாணவியர் எழுதினர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை 47 தேர்வு மையங்களில் 14,536 மாணவ, மாணவியர் எழுதினர்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3,888 மாணவர்களும், 4,633 மாணவியரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 2,895 மாணவர்களும், 3,120 மாணவியரும் எனமொத்தம் 14,536 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் 11 மாற்றுத் திறனாளிகளும் தேர்வு எழுதுவதால் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 47 தேர்வு மையங்களிலும் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க 86 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

 தேர்வு எழுதுவோருக்கு தேவையான போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கு அண்ணா பல்கலை. பேராசிரியர் குழுவினரும் தேர்வு மையங்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை தனித்தனி வாகனங்கள் மூலம் ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல 12 வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

 ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments