FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்த தங்கத் தேரை சீரமைக்க கோரிக்கை

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்துள்ள தங்கத் தேரை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

ராமேசுவரம் கோயிலில் சேதமடைந்துள்ள தங்கத் தேரை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான தங்கத் தேர் உள்ளது. இத்தேரில் ஆடி மற்றும் மகா சிவராத்திரி உள்பட முக்கிய திருவிழா நாள்களில் சுவாமி, அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

 அதே போல பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கட்டணம் செலுத்தி தேர் இழுப்பர். இந்நிலையில் இந்த தங்கத் தேரின் சக்கரம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்து விட்டதால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கோயிலுக்கு வர வேண்டிய வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த தங்கத் தேரை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments