FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய தேர்பவனி

திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் தூய செங்கோல் மாதா ஆலய தேர்ப் பவனி திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:15 am IST
பகிர்:

திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் தூய செங்கோல் மாதா ஆலய தேர்ப் பவனி திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு கடந்த 24 ஆம்தேதி வியாழக்கிழமை சிவகங்கை வியான்னி அருள்பணி மையம் இயக்குநர் பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காரங்காடு பங்கு தந்தை சுவாமிநாதன் தலைமையில் ஒவ்வொரு நாள் மாலையும்  சிறப்பு திருப்பலி, நவநாள் அனுசரிப்பு, செபமாலை ஆகியவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பங்கு தந்தை செபஸ்தியான் தலைமையில் நற்கருணை திருப்பலி நடைபெற்றது. 
 அதனை தொடர்ந்து மின்னொளியால் அலங்கரிக்கபட்ட தேரில் புனித செங்கோல் அதிதூதர், புனித புதுவை அந்தோனியார் மற்றும் தூய செங்கோல் மாதா ஸ்வரூபம் தாங்கி தேர் பவனி காரங்காடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்ஆசி வழங்கினார்கள். 
 பின்னர் பங்கு தந்தை சுவாமிநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 
இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments