FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி மூலம் புதிய பாடத்திட்ட பயிற்சி

ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி மூலம்  புதிய  பாடத்திட்டம்  குறித்த  பயிற்சி   புதன், வியாழன் ஆகிய  இரு தினங்கள்  நடைபெற்றது. 

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:13 am IST
பகிர்:

ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி மூலம்  புதிய  பாடத்திட்டம்  குறித்த  பயிற்சி   புதன், வியாழன் ஆகிய  இரு தினங்கள்  நடைபெற்றது. 
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாடத்திட்டம் ஒன்று மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் பாடம் கற்பிக்க 141அரசு நடுநிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் 824 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பாடத்திட்டத்தில் உள்ள கியூ.ஆர்.கோடைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் பயிற்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 வட்டார வள மையங்களில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
இப்புதிய பாடத்திட்டத்தின்படி காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதனைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்ப கல்வியினை பள்ளியில் உள்ள  இதர தொழில் நுட்பக் கருவிகளான  கணினிக்கள், மடிக்கணினிக்கள் மற்றும் புரொஜெக்டர் உதவியுடன் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களான எம்.உலகராஜ், எம்.வனிதா, ஏ.ஸ்ரீதேவி ஆகியோர் கருத்தாளர்களாக இருந்து நடத்தினர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ்குமார், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், கணினி வழிக்கற்றல் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments