இளைஞர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
திருவாடானை வட்டம், தொண்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களில் இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருவாடானை வட்டம், தொண்டி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களில் இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தொண்டி அருகே உள்ள புதுபட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது மரைக்காயர் (35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கபூர் குடும்பத்தினருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை முகம்மது மரைக்காயரிடம் கபூர் மற்றும் மேலும் நான்கு பேர் தகராறு செய்து கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த முகம்மது மரைக்காயர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தொண்டி போலீஸில் முகம்மது மரைக்காயர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சிக்கந்தர் (35), அபுல்பசீல் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கபூர், முகம்மது அப்துல்லா, அப்துல் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.