அன்ன வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரர் வீதி உலா
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருக்கல்யாண விழாவில், செவ்வாய்க்கிழமை இரவு
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருக்கல்யாண விழாவில், செவ்வாய்க்கிழமை இரவு உற்சவ மூர்த்தி அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோயில் ஆடிப்பூரத் திருக்கல்யாண தேரோட்ட விழா கடந்த 4 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு பல்லக்கு, காமதேனு, கேடகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், அம்பாள்
அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி மாலை நடைபெறும். விழா ஏற்பாட்டினை ராமநாதபுரம் சமஸ்தான கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.