பரமக்குடியில் பைக் விபத்து:கல்லூரி மாணவர் சாவு
பரமக்குடியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பரமக்குடியில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார் (21). கல்லூரி மாணவரான இவர் ஊரிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பரமக்குடி நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஓம்சண்முகா திரையரங்கு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாயில் விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமுற்ற அவர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நகர் காவல் நிலையத்தில் அவரது சகோதரர் வைத்தீஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.