FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

அ.பழங்குளம் கிராமத்தில் முள்புதர் மண்டிகிடக்கும் சுகாதார வளாகம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அ.பழங்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் முள்புதர் மண்டி பயன்பாடின்றி கிடக்கிறது. 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:48 am IST
பகிர்:

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அ.பழங்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகத்தில் முள்புதர் மண்டி பயன்பாடின்றி கிடக்கிறது. 
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ.பழங்குளம் கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு வசதியுடன் கழிப்பறை, குளியல் அறைகள் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் சேதமடைந்து வருகிறது. 
இது 2012-2013 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள இவ் வளாகத்தை சுற்றி முள்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் பாம்பு, தேள் போன்ற விஷப் பூச்சிகள் வரும் என அச்சமடைந்து சுகாதார வளாக கழிப்பறைக்குள் செல்ல கிராம மக்கள் மறுக்கின்றனர். இதனால் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. 
எனவே இதை சீரமைத்து ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் ஏற்பாடு செய்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments