கோயிலை சுற்றி போடப்பட்ட சிமென்ட் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
திருவெற்றியூரில் கோயிலைச் சுற்றி போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகும் நிலை உள்ள்து.
திருவெற்றியூரில் கோயிலைச் சுற்றி போடப்பட்டுள்ள சிமென்ட் சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகும் நிலை உள்ள்து.
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. இச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனால் தற்போது இது சேதம் அடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. மேலும் பல இடங்களில் குண்டு குழியுமாக உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் முக்கியமான இந்த திருத்தலத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு தினமும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை பழுதடைந்து மண் சாலையாக மாறிவிட்டது .
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது தேர் இழுக்க பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே தேரோடும் வீதியில் உள்ள இச் சாலையை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.