FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஆக.26 இல் பாரதியார் நினைவு தினப் போட்டிகள்

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நினைவு தின போட்டிகள் இம்மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாரதிநகர் கலைவாணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:49 am IST
பகிர்:

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நினைவு தின போட்டிகள் இம்மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாரதிநகர் கலைவாணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல்சலாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் மகாகவி பாரதி நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பாரதி நினைவு தினம் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாறுவேடம், பாடல், கவிதை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கான போட்டிகள் ராமநாதபுரம் பாரதிநகர் கலைவாணி மெட்ரிக். பள்ளியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ள ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்து இரு மாணவர்களை அல்லது மாணவியரை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்கலாம். போட்டியாளர்களின் பெயர்ப் பட்டியலை இம்மாதம் 24 ஆம் தேதிக்குள் பொன்.சந்திரசேகரன்,செயலாளர், தமிழ்ச்சங்கம், அன்னை கண் மருத்துவமனை வளாகம்,  69,அரசு மருத்துவமனை சாலை,ராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments