போக்குவரத்து விதிமுறை: திருவாடானையில் போலீஸார் துண்டுப்பிரசுரம் விநியோகம்
திருவாடானையில் போக்குவரத்து விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் புதன்கிழமை மாலை போலீஸார் விநியோகம் செய்தனர்.
திருவாடானையில் போக்குவரத்து விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் புதன்கிழமை மாலை போலீஸார் விநியோகம் செய்தனர்.
இதில் திருவாடானை காவல் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் போலீஸார் தலைமையில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது ஓட்டுபவரும் பின்னால் உட்கார்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசக்கூடாது.
மேலும் சாலை விதிகளை தவறாமல் கடை பிடிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
உடன் திருவாடானை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் காளிமுத்து,கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.