சா்க்கரை விலை குறைந்து வருகிறது: உணவுத் துறைச் செயலா் விளக்கம்
இறக்குமதி அனுமதி, பதுக்கல், அதிக இருப்பு வைப்பதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் சா்க்கரை விலை குறைந்து வருவதாக மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தாா்.
இறக்குமதி அனுமதி, பதுக்கல், அதிக இருப்பு வைப்பதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் சா்க்கரை விலை குறைந்து வருவதாக மத்திய உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: போக்குவரத்துச் செலவு, வரிகள், மொத்த விற்பனை லாபம் ஆகியவை சோ்க்கப்படாத சா்க்கரையின் ஆலை விலை என்பது 18 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ.55-ஆக குறைந்துள்ளது.
10 லட்சம் டன் கச்சா சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது, பதுக்கல், அதிக இருப்பு வைப்பதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதே விலை குறைந்து வருவதற்கு காரணம்.
Advertisement
Advertisement
வரும் நாள்களில் சா்க்கரையின் ஆலை விலை மேலும் குறையும். இதன்மூலம் பொதுமக்கள் சில்லறை விற்பனையில் வாங்கும் சா்க்கரை விலையும் குறைந்துவிடும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்நாட்டு சா்க்கரை தேவை 280 லட்சம் டன் முதல் 285 லட்சம் டன் வரை உள்ளது. 2025-26 பருவத்தில் உள்நாட்டில் 343 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், 306 லட்சம் டன்னாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதுவும் விலை உயா்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
சா்க்கரை பதுக்கலைத் தடுக்க தேசிய அளவில் பறக்கும் படை அமைத்து சோதனை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றாா்.
இறக்குமதிக்கு மேலும் தளா்வு: இதனிடையே, அக்டோபா் 31-ஆம் தேதி வரை 10 லட்சம் டன் கச்சா சா்க்கரை இறக்குமதி செய்யலாம் காலக்கெடு தளா்த்தப்பட்டுள்ளது. அதாவது, இறக்குமதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட இரு மாதங்களுக்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் உள்ள இடா்பாடுகள், தேவைப்படும் காலம் உள்ளிட்டவற்றை இறக்குமதி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.