FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆர்.எஸ்.மங்கலத்தில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி செயலாளருமான குருசாமி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி விளங்கி வருகிறது. மேலும் தாலுகா தலைநகர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் நாளுக்கு நாள் புதிய புதிய குடியிருப்புகள் உருவாகி மக்கள் தொகை பெருகி வருகிறது. ஆனால் பேரூராட்சியின் பொது சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பேரூராட்சியில் போதிய அளவு கழிவுநீர் கால்வாய்கள் இல்லாமல் இருப்பதுதான். கடந்த பல ஆண்டுகளாக இந்த பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய்விட்டன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலைகளையும் பிரதான வீதிகள் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வீதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆர்.எஸ். மங்கலம்  பேரூராட்சிக்கு தனிக்கவனம் செலுத்தி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments