FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராடும் பெண்கள் உடைமாற்ற இடமின்றி தவிப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட புனித தீர்த்தங்களுக்கு அருகில்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட புனித தீர்த்தங்களுக்கு அருகில்  பெண்கள் உடைமாற்றும் அறைகள் இல்லாததால் பெண் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் சிரமமின்றி நீராடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து அறநிலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  இதனையடுத்து கோயிலுக்குள் இருந்த  6 தீர்த்தங்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் 5 தீர்த்தங்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மகாலட்சுமி தீர்த்தம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து புதிய தீர்த்தங்கள் அனைத்திலும் பக்தர்கள் நீராடி வருகின்றனர். தீர்த்தங்களில் நீராடிய  பெண்கள் உடை மாற்ற அறைகள் அமைக்கவில்லை.  இதனால் புனித நீராடி விட்டு வரும் பெண்கள் உடை மாற்ற இடமின்றி தவிக்கின்றனர். மேலும் பக்தர்கள் தீர்த்தம் நீராடச் செல்லும் வழியில் கற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் கற்கள் மீது நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை  புனித நீராடும் பெண்கள் உடைமாற்றும் வகையில் தற்காலிக தடுப்புகளை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments