FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலாடி பகுதியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கடலாடி பகுதியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கடலாடி பகுதியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்முருகன் கடந்த 14 ஆம் தேதி சிலரால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்தும், வட்டாட்சியரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். இதில் துணைத்தலைவர் வரதராஜன், இணைச்செயலர் காசிநாததுரை, வட்டத்தலைவர் சிவக்குமார், வட்டக்கிளை துணைத் தலைவர் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வட்டாட்சியர் மீதான தாக்குதலைக் கண்டித்து திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments