சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் சடலத்தை சொந்த ஊர் கொண்டு வர ஆட்சியரிடம் மனைவி மனு
சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி
சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி தனது இரு மகள்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மாயாகுளம் பகுதி விவேகானந்தபுரத்தை சேர்ந்த முனியசாமியின் மனைவி எம்.பஞ்சவர்ணம். இவர் தனது இரு மகள்களுடன் ஆட்சியரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
எனது கணவர் முனியசாமி 15 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்குச் சென்று ஓட்டுநராக பணி
செய்து வந்தார். இம்மாதம் முதல் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
பின்னர் இம்மாதம் 4 ஆம் தேதி கணவர் முனியசாமி இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது. எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எனக்கு இரு மகள்கள் இருப்பதால் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் கணவர் பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தருமாறும் பஞ்சவர்ணம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.