ராமநாதபுரத்தில் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏ.டி.எஸ்.வகை கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக வும் உள்ளது. சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
தமிழக முதல்வர் வரும் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு வலுச்சேர்க்கும் விதமாக, மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை கண்காணிக்க துணை ஆட்சியர் மற்றும் உதவி
இயக்குநர் நிலையிலானஅலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்னர். இந்த அறிவிப்பை மீறி செயல்படும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் ஜூலை 15 முதல் முதற்கட்டமாக ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். அவர்கள் மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும்.
ஒவ்வொரு முறையும் ரூ.1000க்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.