FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவாடானை பகுதியில் மயில்கள் வேட்டையாடுவதை தடுக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேசிய பறவையான மயில்கள்  வேட்டையாடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

திருவாடானையில் தேசிய பறவையான மயில்கள்  வேட்டையாடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை சுற்று வட்டாரங்களில் நூற்றுக்கணக்காண  கண்மாய்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. இதனால் இங்கு தேசிய பறவையான மயில்கள் ஆயிரக்கணக்கில் பெருகி உள்ளன. அதேபோல் மான்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இப்பகுதியில் சமூக விரோதிகள் உணவிற்காக மயில்களை  வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. மயில்கள் மற்றும் மான்கள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியது: வனத்துறையினர் மான், மயில்கள் வேட்டையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மான்கள், மயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே வனத்துறையினர் தனிக்கவனம் செலுத்தி வேட்டைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments