தீக்குளித்த மாணவர் சாவு
பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றும் தவறான தகவலால் தீக்குளித்த மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பரமக்குடியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றும் தவறான தகவலால் தீக்குளித்த மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பரமக்குடி காய்கறி மார்க்கெட் தெருவில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் கமிஷன் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்வரன்(15). பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியானது. இந் நிலையில் அவர் 246 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தோல்வி அடைந்து விட்டதாக அவரது நண்பர்கள் செல்லிடப்பேசி மூலம் தவறான தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த விக்னேஷ்வரன் வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை விக்னேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.