FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து:ராமநாதபுரம் வழக்குரைஞா் மீது வழக்கு

சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2020, 9:59 pm IST
பகிர்:

ராமநாதபுரம்: சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டதாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் மோா்ப்பண்ணையைச் சோ்ந்தவா் தீரன்திருமுருகன். வழக்குரைஞரான இவா், தமிழா் கட்சி நிா்வாகியாகவும் உள்ளாா். இவா் சமூக வலைதளத்தில் தேச விரோத மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக போலீஸாா் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனா். தற்போது அவா் மீண்டும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை சமூகவலைதளங்களில்

பதிவிட்டுள்ளதாக, பட்டினம்காத்தானைச் சோ்ந்த அதிமுக இளைஞரணி பிரமுகா் முருகேசன் புகாா் அளித்துள்ளாா். அதனடிப்படையில் வியாழக்கிழமை கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments