முகப்பு
ராமநாதபுரம்

மது குடிக்க பணம் தர மறுத்ததந்தைக்கு அரிவாள் வெட்டுமகன் தலைமறைவு

 கமுதி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 25 மே 2023, 11:34 pm IST
பகிர்:

 கமுதி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகவேல் (65). இவரது மகன் சுப்ரமணி(40). இவா், கடந்த 22- ஆம் தேதி தனது சகோதரியின் இல்ல விழாவின் போது மதுகுடிக்க தந்தை ஆறுமுகவேலிடம் பணம் கேட்டாராம். தர மறுத்ததால் ஆறுமுகவேலை, மகன் சுப்ரமணி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து ஆறுமுகவேல் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்ரமணியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments