பேச மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு!
பரமக்குடி அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் பேச மறுத்த காதலியை புதன்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் கீழக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகள் பிரியங்கா (21). இவரும் இதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் மகன் சோபணனும் (25) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரியங்காவின் சகோதரி நந்தினிக்கும் (25) சாயல்குடியைச் சோ்ந்த விக்னேஷூக்கும் ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
பின்னா், சொந்த ஊரான கீழக்கோட்டை கிராமத்திலுள்ள மடக்கரை சுவாமி ஆலயத்துக்கு வழிபாடு செய்ய தம்பதியினா் வந்தனா். அவா்களுடன் பிரியங்காவும் வந்திருப்பதை அறிந்த சோபணன் அங்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினாா். இதைத் தடுக்க முயன்ற நந்தினியையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினராா். இதில் பலத்த காயமடைந்த பிரியங்கா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.