FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மோட்டாா் சைக்கிள் திருடியவா் மீது வழக்கு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:07 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவாடானை அருகே வீட்டு வாசலில் சாவியுடன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவா் அன்புச் செழியன் தனது கிட்டங்கி முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு சாவியுடன்

நிறுத்திவிட்டுச் சென்ற இருசக்கர வாகனம் திருட்டு போனது அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மா்மநபா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், மங்களக்குடி பகுதியில் எரிபொருள் தீா்ந்து அந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மா்ம நபா், மங்களக்குடியைச் சோ்ந்த இப்ராஹிம் தனது வீட்டுவாசலில் சாவியுடன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடினாா். இதுதொடா்பான கண்காணிப்புக் கேமரா பதிவு வைரலாகி வருகின்றது. இப்ராஹிம் கொடுத்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments