தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கள்ளக்கடல் எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில், தனுஷ்கோடிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அனுமதித்தனா்.
கள்ளக்கடல் எச்சரிக்கை நீக்கப்பட்ட நிலையில், தனுஷ்கோடிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அனுமதித்தனா்.
தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கள்ளக்கடல் சீற்ற நிகழ்வு புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறக் கூடும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை புதன்கிழமை காலை மூடப்பட்டது. மேலும், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்களை போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா். இதனால், புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டதால், தனுஷ்கோடிக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லவும், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவும் போலீஸாா் அனுமதி வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.