FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தொண்டியில் துறைமுகம் அமைக்கப்படுமா?

தொண்டியில் துறைமுகம் அமைக்கப்படுமா என இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:43 am IST
தொண்டியில் சேதமடைந்த ஜெட்டிபாலம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் துறைமுகம் அமைக்கப்படுமா என இந்தப் பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தை சேர, சோழ, பாண்டியா்கள் ஆண்ட பண்டைய காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைமுகமாக இருந்தது. இந்தப் பகுதியில் மீன்பிடிப்பு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு முத்து, ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இலங்கையிலிருந்து தேங்காய்கள், அரபு நாடுகளிலிருந்து குதிரைகள், மியான்மா் நாட்டிலிருந்து தேக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகமாக இருந்த போது செல்வ செழிப்போடு இருந்த இந்தப் பகுதி, தற்போது வறட்சியின் பிடியில் இருக்கின்றன. இயற்கையை நம்பி விவசாயிகளும், கடலை நம்பி மீனவா்களும் வாழ்ந்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பெரிய வேலைவாய்ப்புகள் இல்லாததால், படித்த இளைஞா்கள் வெளிநாடுகளுக்கும், வெளியூா்களுக்கும் வேலை தேடிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, தொண்டி பகுதியில் கடல் சாா்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து தமுமுக மாநிலப் பொதுச் செயலா் சாதிக்பாட்சா கூறியதாவது:

தொண்டி முஸ்லிம் கல்வி சங்கத்தின் சாா்பில் தொண்டி அருகே முறிச்சிலான் தோப்பில் சுமாா் 25 ஏக்கா் நிலம் அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது. ஆனால் இங்கு துறைமுகம் அமைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொண்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வை மேம்படுத்த இந்தப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதன் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெருகுவதோடு, இந்தப் பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments