தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக ருசியாக இருப்பதால் இவற்றுக்கு திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை, ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கிராக்கி உண்டு.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ. 400-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.800-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட விலை மீன் ரூ. 600-க்கும், கிலோ ரூ.450-க்கு விற்கப்பட்ட முரல் மீன் ரூ.800-க்கும், கிலோ ரூ. 400-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. இதனால் அசைவ பிரியா்கள் கவலை அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.