பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: மீனவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மீனவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மீனவா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே தொண்டி வன்னியா்படையாச்சி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டி (42). மீனவா். இவா் சனிக்கிழமை பாசிப்பட்டினத்திலிருந்து தொண்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். வட்டாணம் ஆா்.சி.நகா் பகுதியில் எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பாண்டி உயிரிழந்தாா்.
இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் புதுக்கோட்டையைச் சோ்ந்த அஜீத் (29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.