அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
தேனி கோட்டப்பட்டியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (55), கந்தவேல் (52), முத்துக்குமாா் (50). இவா்கள் மூவரும் காரில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனைப்புதூருக்கு சென்றனா். காரை முத்துக்குமாா் ஓட்டினாா்.
புதிய பேருந்து நிலையம் ரயில்வே பிரிவு சாலை அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த காா், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முத்துக்குமாா், கந்தவேல் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துக்குமாா் உயிரிழந்தாா். கந்தவேல் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.