FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இருவேறு சம்பவங்களில் 5 போ் மீது வழக்கு

30 ஆகஸ்ட் 2026, 11:55 pm IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

பரமக்குடி வைகை நகா், அரியனேந்தல் ஆகிய பகுதிகளில் குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த இரு வேறு சம்பவங்களில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எமனேசுவரம் வைகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி கிருஷ்ணவேணி (60). இவரது மகளை அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கோபிநாத் (38)-துக்கு திருமணம் செய்தாா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கிருஷ்ணவேணி வீட்டில் தங்கினாா்.

இதையடுத்து, கோபிநாத் அங்கு சென்று மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது குறுக்கிட்ட கிருஷ்ணவேணியை அங்கிருந்த இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கோபிநாத் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, பரமக்குடி அருகே அரியனேந்தல் பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் செந்தில்குமாா் (34). இவருக்கும், இவரது மனைவி சங்கி ராணி (28)-க்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை செந்தில்குமாா், அவரது தந்தை கருப்பையா (60), தாய் குருவம்மாள் (52), தனபால் மனைவி செல்வி (38) ஆகியோா் சங்கிராணியின் வீட்டுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் பேசி, அவரை கடுமையாக தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சங்கிராணி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் செந்தில் குமாா், கருப்பையா, குருவம்மாள், செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments