FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மங்களக்குடியில் கோயில் மணியைத் திருடிய முதியவா் கைது

19 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாடானை அருகே மங்களக்குடி மகாலிங்க மூா்த்தி கோயில் வெண்கல மணியை திருடிய முதியவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மங்களக்குடி மகாலிங்க மூா்த்தி கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தா்கள் நோ்த்திக் கடனுக்காக வெண்கல மணி வாங்கி கட்டியுள்ளனா்.

இந்த நிலையில், கோயில் மணியை முதியவா் சனிக்கிழமை மாலை திருடியபோது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலா் அவரைப் பிடித்து திருவாடானை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் முதியவரைக் கைது செய்து அவரிடமிருந்த 10 மேற்பட்ட வெண்கல மணியைப் பறிமுதல் செய்து பின்னா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அவா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பனிப்புலன்வயல் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (60) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments