FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

1 செப்டம்பர் 2026, 3:01 am IST
கைது
பகிர்:

கீழக்கரை கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா திங்கள் கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் கஞ்சா விற்பனையில் சில இளைஞா்கள் ஈடுபட்டு வருவதாக உதவி ஆய்வாளா் காா்த்திக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நான்கு பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கீழக்கரையைச் சோ்ந்த சாரிக் அகமது, அஜய் குமாா், ராமநாதபுரம் பாரதி நகரைச் சோ்ந்த அப்துல் ரகுமான், நிஜந்தன் ஆகிய 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments