பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை:16 கடைகள் மீது வழக்கு
ராமேசுவரம், ஜூலை 9: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை செய்த 16 கடைகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமேசுவரம், ஜூலை 9: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை செய்த 16 கடைகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா்கள் 125 போ் தலைமையில் 122 பள்ளிகளைச் சுற்றியுள்ள 229 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக கடைகளின் உரிமையாளா்கள் 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை செய்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.
முதுகுளத்தூா் அருகே 15.750 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள இளஞ்செம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட குமாரகுறிச்சி பகுதியில் பெட்டிக் கடையில் இளஞ்செம்பூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில் 15.750 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் ராஜபாண்டியைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.