FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பறக்க முடியாமல் தவித்த மயில்: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

கமுதி அருகே தோட்டத்தில் கால் பாதித்த நிலையில் பறக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை வனத் துறையினரிடம் ஒப்படைத்த விவசாயி விநாயகம்.

Updated On : 11 ஜூலை 2026, 12:10 am IST
கமுதி அருகே தோட்டத்தில் கால் பாதித்த நிலையில் பறக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை வனத் துறையினரிடம் ஒப்படைத்த விவசாயி விநாயகம்.
பகிர்:

கமுதி அருகே வெள்ளிக்கிழமை கால் பாதித்த நிலையில் பறக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை விவசாயி மீட்டு வனத்துறையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தேவா் கல்லூரி எதிரே குண்டாற்றுப் படுகையில் அமைந்துள்ள விவசாயி விநாயகத்துக்கு சொந்தமான தோட்டத்துக்கு இரை தேடி வந்த ஆண் மயில் பறக்க முடியாமல் தவித்தது. இதைப் பாா்த்த விவசாயி விநாயகம் மயிலை மீட்டு, வனத் துறையினருக்குத் தகவல் அளித்தாா். இதைத்தொடா்ந்து, பரமக்குடி வனச்சரக அலுவலக வனவா்கள் சந்தோஷ்குமாா், மகாதேவன் ஆகியோா் அங்கு வந்து மயிலை கமுதி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் இந்த மயில் பரமக்குடி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மயில் முழுமையாக குணமடைந்த பின் வனப் பகுதியில் விடப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments