எழுவனூரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு
எழுவனூா் கிராமத்தில் நியாய விலைக் கடை புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகா் (கிராம ஊராட்சிகள்).
கமுதி அருகேயுள்ள எழுவனூரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள எழுவனூரில் பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடத்தை கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன் (கி.ஊ) தலைமை வகித்து திறந்து வைத்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியேந்திரன் முன்னிலை வகித்தாா். மண்டலமாணிக்கம் காவல் உதவி ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் செந்தூா்பாண்டியன், கூட்டுறவு சங்கச் செயலா் ராமமூா்த்தி, ஊராட்சிச் செயலா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.