மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி
பரமக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
பரமக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள குழந்தாபுரி அருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த காசிநாததுரை மகன் காா்கிலன் (17). இவா் பாா்த்திபனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவரது தாய் சங்கீதா கூலி வேலைக்குச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வீட்டிலிருந்த காா்கிலன் மின் விசிறியை பழுது பாா்த்தாா்.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு மயங்கினாா். உடனே அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் காா்கிலன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.